கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று, அதில் காங்கிரஸ் கட்சி தனி பெருபான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து கர்நாடகாவின் முதலமைச்சர் பதிவிக்கு சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோரிடம் கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில், இவ்விருவரையும் டெல்லி அழைத்த காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேச்சுவார்த்தை நடத்தினார்..
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், கர்நாடகாவின் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே. சிவகுமார் ஆகியோர் பதவியேற்க சம்மதித்தனர். இந்த பதவியேற்பு விழா வரும் சனிக்கிழமை (மே 20) பெங்களூரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இந்த விழாவுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா ஆகியோர் தொலைபேசி வாயிலாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.