Monday, April 22, 2024 8:19 pm

பிரதோஷம் தோன்றியது எப்படி?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சிவலாயங்களில் நம்மை முதன்முதலாக வரவேற்பவர் நந்தியம்பெருமான் தான். ஆகவே, உங்களுக்கு சிவனின் அருள் கிடைக்க வேண்டுமானால், நீங்கள் நந்தியைத்தான் முதலில் நாம் வணங்க வேண்டும். மேலும், இந்த பிரதோஷ காலங்களில் நந்திக்கு தான் முதல் மரியாதை கொடுக்க வேண்டும். பின்னர் நந்தியின் காதுகளில் நமது பிரச்சனைகளைச் சொன்னால், அவர் ஈசனிடம் சொல்லி, நம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பார் என்பது நம்பிக்கை.

அதைபோல், பாற்கடலைக் கடைந்த போது வாசுகி பாம்பினால் வெளியிடப்பட்ட விஷத்தை அருந்திய சிவபெருமான், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனமாடி விஷத்தின் வெம்மையைத் தணித்துக் கொண்டார். அதைத்தான் பிரதோஷ நாளாக வணங்கி வருகிறோம். அதனால் தான் இந்த பிரதோஷ பூஜையில் நந்திக்கு முதல் அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும், இந்த பிரதோஷ காலத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி, தேவர்களும், சிவாலயத்துக்கு வந்து விடுவதால், நந்தியை வழிபட்டால், சகல தெய்வங்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

சிவபெருமானின் வாகனமாக காளை திகழ்வதால் தான், பிரதோஷ காலத்தில் அருகம்புல்லை மாலையாகக் கட்டி அணிவித்து வணங்குகிறோம் என முன்னோர்கள் தெரிவித்தனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்