Wednesday, June 7, 2023 5:06 pm

குடும்பத்தில் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய வீட்டு பூஜை குறிப்புகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பெண்களே மாங்கல்ய பலம் அதிகரிக்க நீங்கள் செய்யவேண்டியது

பெண்களின் மூன்று இடங்களில் ஸ்ரீலட்சுமிதேவி வாசம் செய்கிறாள். முதல் இடம் நெற்றி 2-வது இடம் மாங்கல்யம்,...

நெய்விளக்கு ஏற்றுதலும், அதன் பலன்களையும் தெரிந்து கொள்வோம் வாங்க

அம்மன் சன்னதியில் நெய் தீபம் ஏற்றுவதால் அவர்களுக்குப் பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது,...

எந்த தோஷம் இருந்தாலும் இங்கு சென்று வழிபட்டால் உடனே நீங்கும்

உங்கள் ஜாதகத்தில் நாக தோஷம் இருப்பவர்கள்,புத்திர தோஷம் இருப்பவர்கள், காலசர்ப்ப தோஷம்...

கிருஷ்ணர் பிறந்தது எதற்காக தெரியுமா ?

உலகில் அதர்மம் 'இப்படித்தான் வரும்' என்று ஏதாவது வழி இருக்கிறதா? இல்லை...
- Advertisement -

நீங்கள் உங்கள் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி. வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது, விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது, தூய்மையான காற்றும் கிடைக்கும் என்கின்றனர்.மேலும், உங்கள் வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

அதன்படி, இந்த பூஜை அறையில் சிவன், பார்வதி, விநாயகர். முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும். மேலும், இந்த செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும். நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.

அதேசமயம் இந்த அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது என்றும், அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்