இப்பொழுது உள்ள கால சூழ்நிலைகளில் பல மக்கள் தங்களது வேலை நிமித்தமாகவும் , சுற்றுலா செல்லவும் போன்ற பல காரணங்களால் வெளிநாடுகளில் அன்றாடம் சென்று வருகின்றனர். அப்படி இந்தியாவில் இருந்து செல்வோர்கள் அங்கு சில தேவைகளுக்காக கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக மத்திய அரசு 5 % வரி விதித்திருந்தது.
இந்நிலையில், இனி வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் விதிக்கப்படும் வரி 5ல் இருந்து 20% ஆக உயிர்த்தியுள்ளதாகவும், இதை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உதாரணமாக நீங்கள் கிரெடிட் கார்டில் ரூ. 2.5 லட்சம் செலவிட்டால் ரூ.50,000 வரி சேர்த்து ரூ. 3 லட்சம் செலுத்த வேண்டும். மேலும், இவ்வகை பரிவர்த்தனைகளுக்கு சில வங்கிகள் ஃபோரக்ஸ், ஜி.எஸ்.டி. வரிகளும் கூடுதலாக விதிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.