AK62 என்று பெயரிடப்பட்ட அஜித் குமாரின் வரவிருக்கும் படத்தின் தயாரிப்பாளர்கள், நள்ளிரவில் நட்சத்திரத்தின் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக தலைப்பை அறிவித்தனர். மகிழ் திருமேனி இயக்கிய மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏகே 62 இப்போது விடா முயர்ச்சி என்று பெயரிடப்பட்டுள்ளது, இது ஆங்கிலத்தில் உறுதி மொழியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது என்ற டேக்லைனும் இடம்பெற்றுள்ளது.
விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித்குமார் புதிய கெட்டப்பில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே 1 ஆம் தேதி அவரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
அதன்படி, அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைத்துள்ளன்ர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் அஜித்குமார் புதிய கெட்டப்பில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது
அவர் வேறு யாரும் இல்லை விஜய் சேதுபதிக்கு சில்பா என்ற கதாபாத்திரத்தை கொடுத்த தேசிய விருது வாங்கும் வரை அழைத்துச் சென்ற இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில்தான் 63 படம் உருவாக்கப் போவதாக இப்போ கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பெரிய தகவல் வெளிவந்துள்ளது.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தல அஜித்தின் கேரியரில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் இல்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தியாகராஜன் குமாரராஜா இதுவரை ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் என்ற இரண்டு படங்களை மட்டுமே எடுத்துள்ளார்.
ஆனால் இந்த இரண்டு படங்களுமே ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்து உள்ளன என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. தல அஜித் ஏற்கனவே சொன்னது போல் இனிமேல் நடிகைகளுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதை குறைத்து விட்டு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க முடிவு செய்துவிட்டார் என்பது இதில் இருந்து தெரிகிறது.
விடா முயர்ச்சி இந்த மாதம் திரைக்கு வர உள்ளது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல்வேறு இடங்களில் படம் எடுக்கப்படும் என படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.