Tuesday, June 6, 2023 8:38 am

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! விடாமுயற்சி படத்தில் அஜித் இப்படிபட்ட காட்சிகள் நடிக்கப்போகிறாரா?

spot_img

தொடர்புடைய கதைகள்

நிறங்கள் மூன்று படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் நிரங்கள் மூன்று படத்தின் ரீ-ரெக்கார்டிங்...

விடாமுயற்சி படத்தை பற்றிய அசத்தலான அப்டேட் இதோ !

அஜித் குமார் தனது வரவிருக்கும் விடமுயற்சி படத்திற்காக நடிக்க தயாராகிவிட்டார். அவரது...

மோகனின் ஹரா படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

இதற்கு முன்பு 4554, யோகன் மற்றும் அடடே போன்ற படங்களில் பணியாற்றிய...

விமானம் படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

வெள்ளியன்று, விமானம் படத்தின் தயாரிப்பாளர்கள் படம் யு/ஏ சான்றிதழுடன் சென்சார் சம்பிரதாயங்களை...
- Advertisement -

சுபாஸ்கரன் நடத்தும் புரொடக்ஷன் ஹவுஸ் கோலிவுட்டில் “2.0, “தர்பார்,” மற்றும் “பொன்னியின் செல்வன்” உட்பட பல ஜாம்பவான்களை உருவாக்கியுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் அஜித்துடன் ‘ஏகே 62’ மற்றும் ‘விடைஅமுயற்சி’ மற்றும் ரஜினிகாந்த் ‘க்காக ஒப்பந்தம் செய்துள்ளனர். தலைவர் 171’ படத்தின் சென்னை தயாரிப்பு நிறுவன அலுவலகங்களில் அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மே 16ஆம் தேதி காலை தயாரிப்பு நிறுவனத்தின் பல அலுவலகங்களில் சோதனை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தற்போதைக்கு படத்தின் டைட்டில் விடாமுயற்சி என்பதை தவிர வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. படத்தில் அஜித்துடன் யார் யார் நடிக்கிறார்கள், யார் கதாநாயகி போன்ற எந்த அப்டேட்டுகளும் இல்லாத நிலையில் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மே மாத இறுதி வாரத்தில் தொடங்கும் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தை 70 நாட்களில் முடிக்கப் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித்தின் கேரக்டரை பற்றி அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். இது தற்போது அவருடைய ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. அஜித் கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவர் கடைசியாக அசல் திரைப்படத்தில் தான் இரட்டை வேடத்தில் நடித்தார்.

இதனால் அஜித்துக்கு இரண்டு கதாநாயகிகள் இந்த படத்தில் இருக்கிறார்கள். கதாநாயகிகளுக்கான தேர்வு வேட்டை தற்போது நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித்குமார் தற்போது சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு வேலைகள் முடிந்த பிறகு அஜித் ஆஸ்திரேலியா கண்டத்திற்கு வேர்ல்டு டூர் செல்ல இருக்கிறார்.

கிட்டத்தட்ட 70 நாட்கள் நடக்க இருக்கும் இந்த படப்பிடிப்பில் கடைசி 40 நாட்களில் அஜித் குமார் கலந்து கொள்கிறார். மே இறுதி வாரத்தில் தொடங்கி இரண்டு மாதங்களில் முடிவடைய இருக்கும் படம் என்பதால் அஜித் ரசிகர்கள் இந்த படம் தளபதி விஜய்யின் லியோ படத்துடன் மோதுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே துணிவு மற்றும் வாரிசு நேருக்கு நேர் மோதிய நிலையில் இந்த எதிர்பார்ப்பு தற்போது உண்டாகி இருக்கிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்