Friday, June 2, 2023 12:13 am

உணர்ச்சி உழைப்பு என்றால் என்ன? விரிவாக அலசலாம் வாங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

திருமண தடை நீங்க செல்ல வேண்டிய கோவில்

இந்த காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் உருக்கமான ட்வீட்

ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை...

பசுபதி நடித்த தண்டட்டி படத்தின் ரீலிஸ் தேதி இதோ !

அறிமுக இயக்குநர் ராம் சங்கய்யாவின் தண்டாட்டி திரைப்படம் ஜூன் 23ஆம் தேதி...

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்தது திமுக அரசு

டெல்லியில் வரும் மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தைப் பிரதமர் மோடியே...
- Advertisement -

பிரபல விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த வாரம் திருமணம் வேண்டாம் என சொல்லும் பெண்கள், திருமணம் வேணும் என சொல்லும் ஆண்கள் என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பெண்கள் உணர்ச்சி உழைப்பினால் தான், நாங்கள் திருமணம் வேண்டாம் என சொல்கிறோம் என குறிப்பிட்டு இருந்தார்.

பொதுவாக இந்த உணர்ச்சி உழைப்பு (emotional labour ) என்பது ஊதியம் இல்லாத வேலையாகும். ஏனென்றால் இது ஒரு நபரை மகிழ்ச்சியாக வைத்திருக்க மற்றவர்களால் கட்டாயப்படுத்தப்படுகிறார். அதிலிலும் இந்த மாதிரி உணர்ச்சி உழைப்புக்கு அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே ஆகும்.

ஏனென்றால், ஒரு வீட்டில் கல்யாணமான குடும்ப பெண் வேலைக்கு செல்லும் போது, அவள் அன்று அலுவலக நிமித்தமாக வேலை செய்த பின் வீட்டுக்கு வரும் போது இன்று வீட்டில் வரும்பொழுது அவர்கள் நினைவில் ஒடுவது, அன்று இரவு மற்றும் அடுத்த நாள் சமையல் மேலும் அடுத்த நாள் போட வேண்டிய உடை, குழந்தையக்கான உணவு மற்றும் கணவரின் உடை போன்ற வேலை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஏன் இந்த கணவன் – மனைவி உறவில், சில வீட்டு வேலைகள் போன்ற விஷயங்களில் உதவும் கணவன் இந்த வீட்டு நிர்வாகப் பணிகளையும் , குழந்தை பராமரிப்பு, குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் கையாள அந்த மனைவி தான் செய்ய வேண்டும் என மனைவி தான் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இது அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம் அல்லவா.

பெண்கள் சந்திக்கும் இதுபோன்ற பிரச்சனைகளை பெரும்பாலான ஆண்கள் பொருட்படுத்துவதில்லை. அவர்கள் அதை வேடிக்கை பார்க்கிறார்கள். ஆனால் பெண்கள் எல்லாச் சுமைகளையும் சுமக்க வேண்டும். வீட்டு வேலைகளைச் செய்ய முடியாது என்று அவள் சொன்னால், அவள் மோசமான மனப்பான்மை கொண்டவள், வீட்டைப் பொருட்படுத்தாதவள் என்று முத்திரை குத்தப்படுவாள். ஆண்களுக்கு இந்தச் சுமை எல்லாம் இல்லை.

ஆகவே, இந்த உணர்ச்சிப்பூர்வமான உழைப்பு (emotional labour ) என்பது ஒரே பாலினச் சொல்லாக இருக்கக் கூடாது. இனி வரும் காலத்தில் இந்த உணர்ச்சி உழைப்பு இல்லாமல் இருக்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். அதுவே ஒரு நல்ல சமூகமாகும்

- Advertisement -

சமீபத்திய கதைகள்