நீங்கள் காலை உணவுடன் காபி, டீ குடிப்பதற்கு பதில் வைட்டமின் சி நிறைந்த பழரசங்களைக் குடிக்கலாம். அதற்காக விதவிதமான பல வண்ணங்கள்கொண்ட காய்கறிகள், பழங்களைத் தேர்ந்தெடுத்து வாங்குங்கள். அதைபோல் மதியம், இரவு உணவின்போது குறைந்தது இரண்டு காய்கறி வகைகளைப் பொரியல், கூட்டு செய்து சாப்பிடுங்கள். ஆனால்,காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு எல்லா காய்கறிகளையும் வேகவைத்து, அரைத்து, சூப் தயாரித்து மேலே கொஞ்சம் க்ரீம் சேர்த்துக் கொடுக்கலாம்.
மேலும், நீங்கள் வீட்டில் எந்த இடத்தில் அதிக நேரத்தைச் செலவிடுவீர்களோ அந்த இடத்தில் பழத்துண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு கிண்ணத்தை வைத்துவிட்டால், பார்க்கும்போதெல்லாம் சாப்பிடத் தோன்றும். அப்படி சாப்பிடும் பழங்களை அரைத்து தேன் அல்லது பேரீச்சம்பழ விழுது சேர்த்து வடிகட்டாமல் ஸ்மூதியாக அருந்தலாம்.
பின்னர் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸுக்கு பதில் ஆப்பிள் துண்டுகள் சாப்பிடலாம். வேர்க்கடலை, பாதாம் போன்ற பருப்புகளால் தயாரான “நட்ஸ் பட்டரை”ஆப்பிளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் அமர்க்களமாக இருக்கும்.