இந்த நடப்பாண்டு 16வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்து தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. அந்த வகையில், இனி வரும் ஒவ்வொரு லீக் போட்டியும் அனைத்து அணிகளுக்கும் முக்கியமானது. இதில் டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணியளவு நடைபெற்ற 62வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் பௌலிங் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய ஹைதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன் மட்டுமே எடுத்தால், குஜராத் அணி வெற்றி பெற்றது.
ஆகவே, இந்த நடப்பு ஐபிஎல்-லில் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த அணி இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 9 வெற்றிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிப்பு வருவது குறிப்பிடத்தக்கது