உங்களுக்கு முடியுமானால் அலுவலகத்திற்கு 9 மணிக்கு முன்னதாகவே செல்லுங்கள். அப்படி அலுவலகத்துக்கு செல்லும்போது ஒரு தண்ணீர் பாட்டில் முழுவதும் மோர் எடுத்து செல்லுங்கள். காபி, டீ தவிருங்கள். வெயில் காலங்களில் ஐஸ் வாட்டர் குடிப்பதால் உடல் குளுமை அடையாது. மோர், இளநீர் போன்றவையே குளிர்ச்சியை தரும்.
நீங்கள் வீடுகளில் உள்ள மொட்டை மாடியில் காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீர் ஊற்றுங்கள். இது ஓரளவு வெப்பத்தை குறைக்கும். குழந்தைகளை கிரிக்கெட் போன்ற எந்தவொரு விளையாட்டும் விளையாட காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வெளியில் அனுப்ப வேண்டாம். அதைபோல் முதியவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் சிறிதளவு பருகிக்கொண்டே இருங்கள். அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் பரவாயில்லை தண்ணீர் குடிப்பது அவசியம்.