தமிழகத்தில் பொதுவாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இருப்பருவ மழை பெய்யும். இதில் வடகிழக்கு பருவமழை தான் தமிழகத்திற்கு அதிகளவு மழை கொடுக்கும். இந்த கோடை மழை தமிழகத்திற்கு குறைவாகவே பெய்யும். அப்படி பெய்யும் கோடை மழை அதிகளவு கடலோர மாவட்டங்களில் தான் பெய்யும், மலையோரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைவாக மழை பதிவாகும்.
இந்நிலையில், இந்த நடப்பாண்டு பெய்த மழை பதிவை கடந்த மார்ச் முதலாம் தேதியில் இருந்து மே 11 ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கின் படி, கடலோர மாவட்டமான கன்னியாகுமரியில், வழக்கமாக 193.4 மி.மீ., அளவுக்கு கோடை மழை சராசரியாகப் பெய்யும், ஆனால் தற்போது 188.9 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. இந்த மலையோர மாவட்டமான கோவையில், வழக்கமாகப் பெய்யும் 108 மி.மீ., கோடை மழையை விட, நடப்பாண்டில் 321 மி.மீ., பெய்து, 197 சதவீதம் அதிகமாக பெய்து, புதிய வரலாறு படைத்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.