- Advertisement -
திருச்செந்துார் கோயிலில் மட்டும் இந்த அபிஷேகம் நடைபெறுகிறது. இங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரனை வதம் செய்த பிறகு கோயில் பிரகாரத்தில் இருக்கும் மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருள்கிறார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படுகிறது. அதில் கோயில் அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்கிறார்.
இதை சாயாபிஷேகம் என்பர். ‘சாயா’ என்றால் ‘நிழல்’ என்று பொருள். அசுரனை அழித்து போரில் வெற்றி பெற்ற ஜெயந்திநாதரை குளிர்விக்கும் பொருட்டு இந்த அபிஷேகம் நடைபெறும். இதை தரிசிப்பவர்களுக்கு சங்கடம் நீங்கும் என்கின்றனர். பின்னர், ஜெயந்திநாதர் சன்னதிக்கு திரும்புகிறார். இத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவு பெறுகிறது.
- Advertisement -