Tuesday, April 23, 2024 9:07 pm

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்துவீசிய கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு அபராதம்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடப்பாண்டின் ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 61வது லீக் போட்டியில் சென்னை -கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர் முடிவிலே 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 18.3 ஓவரிலே 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால், சென்னை அணி பிளேஆஃப் சுற்றுக்கு செல்ல சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும், அதைபோல் மற்ற கொல்கத்தா அணி வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்