Tuesday, April 16, 2024 11:42 pm

கர்நாடக முதலமைச்சர் தேர்வு : டெல்லிக்கு விரைகிறார் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே மாதம் 10 ஆம் தேதியில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற கட்சி ஆகியோர் இத்தேர்தலில் பங்கேற்றுள்ளனர். நேற்று முன்தினம் இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பெரும்பான்மை இடத்தை பிடித்து வெற்றி பெற்றது.

இதையொட்டி, நேற்று மாலை காங்கிரஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் சித்தராமையா அல்லது டி.கே. சிவகுமார் ஆகியோரில் யாரை முதலமைச்சராக தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், இந்த ஆலோசனையின் முடிவில் காங்கிரஸ்சின் மேலிடமே முடிவு செய்யும் என கூறப்பட்டது. இந்நிலையில், இன்று (மே 15) முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அவர்களை காங்கிரஸ் கட்சி மேலிடம் சற்று முன் அழைத்துள்ளது.

இதன் காரணமாக டெல்லி செல்கிறார் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா. பின்னர் அங்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 135 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 80 பேர் சித்தராமையாக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்