தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில், இவருக்கு நடிகர் சூர்யாவுடன் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு போன்ற காரணங்களால் படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட்டில் ரீன்ட்ரி கொடுத்து சில படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், தற்போது விகாஸ் பால் இயக்கத்தில் உருவாகும் பாலிவுட் படத்தில் நடிகர் மாதவன் மற்றும் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கின்றனர். இதில் பிரபல கோலிவுட் நடிகை, எக்ஸ்ப்ரெஷன் குயின் ஜோதிகா இப்படத்தில் இணைய உள்ளார் என தகவல் வந்துள்ளது. இவர் பாலிவுட்டில் அறிமுகப்படமான ‘டோலி சஜா கே ரக்னா’வுக்கு பிறகு 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலிவுட்டில் நடிக்கவுள்ளார் ஜோதிகா என்பது குறிப்பிடத்தக்கது.