Tuesday, May 30, 2023 10:46 pm

காது குடைவது சரியா? விளக்குகிறார் மருத்துவர்

spot_img

தொடர்புடைய கதைகள்

பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள்

பீர்க்கங்கொடியின் இலைகளை எடுத்து நன்றாக நீர் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு...

உங்களுக்கு மன அழுத்தம் இருக்கா?

எந்த காரணமும் இல்லாமல் மனம் சோர்வாக இருக்கிறதா, அப்படியென்றால் உங்களுக்கான சுய...

சிக்கனை பிரிட்ஜில் வைத்து சமைப்பதால் ஏற்படும் பாதிப்பு

பொதுவாக நாம் வாங்கும் பொருட்கள் அனைத்தையும் பிரிட்ஜில் வைத்து பழகிறோம். இது...

சொடக்கு தக்காளிப் பழத்தின் மருத்துவக் குணங்கள்

சொடக்கு தக்காளி பொதுவாகச் சாலையோரத்தில் அதிகளவில் காணப்படும். இதுபற்றி  தெரியாமலேயே பழுத்த...
- Advertisement -

காதுக்குள் அரிப்பு ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அரிப்புக்கு மிகவும் பரவலான காரணம் வறட்சி. ஜலதோஷம் மற்றும் நடுக்கத்தால் ஏற்படும் குறை அழுத்தம் காரணமாகவும் சிலருக்கு இப்படி காதுக்குள் அரிப்பு ஏற்படலாம். அப்படி அரிப்பு ஏற்பட்ட போது நாம் காது குடைவதால் காதுக்குள் இருக்கும் சருமம் பாதிக்கப்படும். அதன் விளைவாக காதுக்குள் இன்ஃபெக்ஷன் ஏற்படலாம்.

மேலும், இந்த காதுகுடைய வேண்டும் என்ற உணர்வு தொடர்ந்தால், சுத்தமான தேங்காய் எண்ணெயில் சிறிது பஞ்சை முக்கி, பிழிந்துவிட்டு,அதை காதுக்குள் வைத்துக்கொள்வது ஓரளவு நிவாரணம் தரும். அதைபோல், இந்த நீரிழிவுநோய் பாதிப்புள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் காதுகளைக் குடையவே கூடாது. ஏனென்றால், இவர்கள் காதுகளைக் குடைவதால் ஏதேனும் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டால் நீரிழிவு பாதிப்புள்ளவர்களுக்கு அதைக் குணப்படுத்துவது மிகவும் சிரமமாகலாம்.

ஒருவேளை உங்கள் காதுகளுக்குள் தொடர்ந்து அரிப்பு உணர்ந்தால் நீங்கள் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை(இஎன்டி) மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். அவர் அரிப்புக்கான காரணம் அறிந்து, இன்ஃபெக்ஷன் இருந்தாலும் கவனித்து அதற்கேற்ப சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்