ஐபிஎல் தொடரில் நேற்று (14-05-2023) மாலை 7.30 மணியளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்து சென்னை அணி. இதை தொடர்ந்து, விளையாடிய கொல்கத்தா அணி 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், சென்னை அணியின் இந்த தோல்வி குறித்து பேசிய கேப்டன் தோனி, “180 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என முதல் பந்திலேயே தெரிந்துவிட்டது. அப்போதுதான் பேட்டிங் தேர்வு செய்திருக்க கூடாது என உணர்ந்தேன். மேலும், இப்போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த தோல்விக்கு யாரையும் குறை கூற முடியாது. அனைவரும் முடிந்தவரை முயற்சி செய்தனர்” என கூறியுள்ளார்.