Tuesday, June 6, 2023 8:28 am

தமிழகத்தில் 203 கள்ளச் சாராய வியாபாரிகள் அதிரடி கைது

spot_img

தொடர்புடைய கதைகள்

அரிசிக்கொம்பன் யானை வழக்கு : மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கம்பம் வனப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி, 3 கும்கி...

ஒன்றிய அரசின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு

ஒன்றிய அரசு இன்று (ஜூன் 5) பிற்பகல் தலைசிறந்த 100 கல்லூரிகள்,...

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் லிஸ்ட் தயாராகிறது : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என  அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து...
- Advertisement -

தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 16 பேர் கள்ளச்சாராயம் குடித்து, அதில் 8 பேர் உயிரிழந்து மீதி பேர் உயிருக்கு போராடி வருகின்றனர். இது தமிழகத்தையே உலுக்கியது இச்சம்பவம். இதையடுத்து, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை ஈடுபட டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டு இருந்தார்.

இதன் காரணமாக, போலீஸ் தேடுதல் வேட்டை ஈடுபட்டு வந்தனர். இதில் விழுப்புரம், கடலூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் இதுவரை 202 கள்ள சாராய விற்பவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், 203 கள்ளச் சாராய வியாபாரிகள் கைது செய்தனர். மேலும், இந்த தேடுதலில் 5901 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது என காவல்துறை தலைமை அலுவலகம் சற்றுமுன் அறிக்கை அளித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்