Wednesday, December 6, 2023 1:21 pm

சேப்பாக்கம் கடைசி லீக் போட்டி: இன்று விறுவிறுப்பாக டிக்கெட் விற்பனை தொடங்கியது

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடரின் 74 லீக் சுற்றுகள் நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 12 போட்டிகள் விளையாடி 7 வெற்றி, 1 போட்டி முடிவில்லை பெற்று 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், வரும் மே 14 ஆம் தேதியில் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி , கொல்கத்தா அணியுடன் மோத உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (மே 12) காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை மாற்றுத்திறனாளிக்கு ரூ .2,500 டிக்கெட் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த போட்டிக்கான அதே டிக்கெட் கட்டணம் தொடரும் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்