- Advertisement -
தமிழகத்தில் கடந்த மே 8 ஆம் தேதியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில் 94.31 % சதவீத பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் தமிழ் படத்தில் 2 பேர் மட்டுமே 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இது திண்டுக்கல் மாணவி நந்தினி, அரக்கோணத்தை சேர்ந்த லக்ஷயா ஸ்ரீ ஆகும் . இவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்து வந்தனர்.
அதன்படி, தமிழில் முழு மதிப்பெண் எடுத்த அரக்கோணத்தை சேர்ந்த லக்ஷயா ஸ்ரீயை , தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக இருக்கும் தாடி பாலாஜி அவர்கள் அம்மாணவியை அவரது வீட்டிலேயே சந்தித்து தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
- Advertisement -