தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரை மன்னித்து மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடைபெற்று தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் குளிரான மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு ஆகிய இடங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நேற்று (மே 10) ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கோட்டத்தில் பேசிய ஆட்சியர் கார்மேகம் அவர்கள், ” இனி வரும் 46வது கோடை விழா, மலர் கண்காட்சியை இந்த மாதம் 3வது வாரத்தில் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளோம் என்றும், இந்த விழாவில் படகுப் போட்டி, கயிறு இழுத்தல் போன்றவற்றையும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.