தற்போது ஐபிஎல் தொடர் இந்தியாவில் உள்ள பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் ஆட்டம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்த அணி செல்லும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது
தற்போது ஐபிஎல் தொடரின் இன்றைய (மே 11) லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகின்றன. இந்த மைதானம் வேகப்பந்து வீச்சுக்கும், பேட்டிங்கிற்கும் சாதகமாக இருக்கும். ஆதலால், சேசிங் செய்யும் அணி வெல்ல வாய்ப்புள்ளது. மேலும், ப்ளே ஆஃப் ரேஸில் உள்ள பிற அணிகள் கொல்கத்தாவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.