Friday, December 1, 2023 7:31 pm

வங்கக்கடலில் உருவானது மோக்கா புயல் : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் கடந்த மாதம் பல மாவட்டங்களில் அதிபட்சம் வெயில் வாட்டி வந்திருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்றின் ஈரப்பத்தால் பல இடங்களில் கனமழை பெய்து வந்தது. இதையடுத்து, மே 5 ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்திருந்தது. ஆனால், அதேசமயம் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வங்கக்கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மோக்கா (Mocha) புயலாக உருவானது. மேலும், இந்த புயல் இன்று (மே 11) இரவு தீவிர புயலாகவும், நாளை மிகத்தீவிர புயலாகவும் வலுப்பெறும் என்றும், இது வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் மே 14 ஆம் தேதி காலை வங்கதேசம் – மியான்மர் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

மேலும், இந்த புயல் காற்றின் ஈரப்பதத்தை ஈர்த்தபடி வடக்கு நோக்கி நகர்வதால், தமிழகத்தில் இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கூறியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்