- Advertisement -
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், இவர் கோலிவுட்டில் தயாரிப்பாளராகவும் மற்றும் இயக்குனராகவும் இருந்து வருகிறார். மேலும், இவர் கிராபிக்ஸ் டிசைன் செய்வதில் வல்லவர் ஆவர். இந்நிலையில், இவர் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியில் சென்னையில் உள்ள கோபாலபுரத்திலிருந்து தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது சாவி காணாமல் போனதாக காவல் நிலையத்தில் பரபரப்பாக புகார் அளித்துள்ளார்.
மேலும், இவர் தனது காரின் மற்றொரு சாவி வைத்திருக்கும் பவுச்சும் காணவில்லை என சவுந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -