தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரும் முதலீட்டையும், வேலையின்மையை குறைக்கவும் பல வெளிநாடுகளின் நிறுவனங்களை அழைத்துள்ளனர். அந்த வகையில் நேற்று (மே 9) ஜப்பான் நாட்டை சேர்ந்த மிட்சுபி (Mitsubhi) நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதனால பல சுமார் 2,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
அதேபோல், நாளை (மே 11) அமெரிக்கா நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட உள்ளது என சில மணி நேரத்திற்கு முன் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் மிகப்பெரிய உற்பத்தி ஆலையை அமைக்கிறது சிஸ்கோ (CISCO) நிறுவனம்
மேலும், இதன் மூலம் சுமார் 1200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலைக்கான பணிகள் நடந்துவருவதாகவும் அடுத்த 12 மாதங்களில் முதல் பேட்ஜ் தயாரிப்புகள் வெளியாகும் என இந்தியா வந்துள்ள அந்நிறுவன சி.இ.ஓ. சற்றுமுன் தகவல் அளித்துள்ளார்.