தமிழகத்தில் இருக்கும் 25 உழவர் சந்தைகளில் சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகளுடன் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க அரசாணை வெளியிட்டு உள்ளது தமிழக அரசு. அப்படி அமைக்கப்படும் உணவங்களில் விற்கப்படும் சிறுதானிய உணவுகளில் புவிசார் குறியீடு பெற்ற உணவுப் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும், இந்த உணவகத்திற்கு இலக்கிய நயம் சார்ந்த பெயர் சூட்டப்பட்டு, பலகையில் எழுதவும் உத்தரவிட்டு உள்ளனர்.
மேலும், இந்த உணவங்கள் முதற்கட்டமாக கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தேனி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி வேலூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளது