இன்றைய அவசர காலகட்டத்தில் பல வீடுகளில் காலை உணவே இந்த பிரட் வகைகள் தான். இந்த பிரட் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியவர்கள். அப்படி சாப்பிடும் ப்ரெட்டில் மைதா பிரெட் நல்லதா இல்லை கோதுமை பிரட் நல்லதா என்ற கேள்விக்கான பதிலை நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
நம் சாப்பிடும் கோதுமை பிரெட்டில்தான் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இந்த மைதா பிரெட்டில் கார்போஹைட்ரேட் தான் அளவுக்கு அதிகமாக இருக்கும். மேலும், இந்த மைதா ப்ரெட்டில் கலோரியும் அதிகம். ஆகவே, சீக்கிரமே செரிமானமாகி, உடலின் குளூக்கோஸ் அளவை அதிகரித்துவிடும்.சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக மைதா பிரெட்டைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால், கோதுமை பிரெட்டை அனைவரும் தாராளமாகச் சாப்பிடலாம். பொதுவாக, தினமும் பிரெட் சாப்பிடுவது நல்லதல்ல. இதய நோயாளிகள், பிரெட் வகைகளை தவிர்ப்பது நல்லது என தெரிவித்துள்ளனர்.