தமிழகத்தில் இந்த சித்திரை மாதம் ஆரம்பத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் உக்கரமாக சுட்டெரித்து இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டால் பல இடங்களில் கனமழை பெய்து அங்குள்ள வெப்பத்தை தணித்தது. இந்நிலையில், தற்போது வங்கக்கடலில் புதிய காற்றுழத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (மே 10) அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 11 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளனர்.