அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், ”இந்தியாவை சேர்ந்த அதானி குழுமம் தங்கள் நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது என கூறி அதிக அளவு கடன் பெற்றுள்ளது என்றும், இந்த குழுமம் பங்கு சந்தையில் சில முறைகேடு செய்து போலியாக நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளது என குற்றசாட்டி இருந்தது.
இதையடுத்து, அதானி குழுமத்தின் பங்குகள் அதிவேகமாக சரிந்ததது. மேலும், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக நீதிமன்றம் நிபுணர் குழு ஒன்றை இந்த விவகாரத்தை குறித்து விரிவாக அறிக்கை தயார் செய்ய ஏற்கனவே கூறியிருந்தது. இந்நிலையில், இந்த அதானி குழும முறைகேடு வழக்கில், 6 பேர் கொண்ட நிபுணர் குழு தற்போது உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதனால் இவ்வழக்கு தொடர்பான விசாரணை நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது என தகவல் வந்துள்ளது.