- Advertisement -
இன்று கர்நாடக தேர்தல் விறுவிறுப்பாக காலை முதல் நடந்து வருகிறது. இதில் காலைலேயே பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் அவர்களது வாக்குச்சாவடியில் வாக்கு பதித்து ஜனநாயக கடமையை ஆற்றினர். இதில் தற்போது வரை 37.25 % சதவீதம் பேர் தங்களது வாக்குகளை பதித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பெங்களூரூவில் உள்ள வினோதமாக ராஜராஜேஸ்வரி நகரில் காங்கிரஸ் கட்சியினர் கேஸ் சிலிண்டருக்கு மாலை போட்டு, தேங்காய் உடைத்து ஊதுபத்தி ஏற்றி பூஜை செய்துள்ளனர்.ஏனென்றால், தேசிய கட்சியான பாஜக ஆட்சியில் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்ததை மக்கள் நினைத்து பார்க்க வேண்டும் என்பதை குறிப்பிடும் வகையில் இவ்வாறு செய்துள்ளதாக அக்காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளனர்.
- Advertisement -