Wednesday, May 29, 2024 7:57 am

பிறந்த குழந்தையின் கண்களில் மை தீட்டலாமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிறந்த குழந்தைகளின் சருமம் மிக மென்மையானது. எனவே, அவர்களின் சருமத்துக்கு குளியல் பொடி, மஞ்சள் பொடி, பவுடர் போன்றவற்றை உபயோகிப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவற்றை உபயோகிப்பதால் குழந்தையின் சருமம் வறண்டு போகவும், சிவந்துபோகவும், அரிப்பு, எரிச்சல் ஏற்படவும், அலர்ஜிக்கு உள்ளாகவும் கூடும். மேலும், இதனால் புண்களும் நோய்த்தொற்றும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

அதன்படி, இனி குழந்தைகளைக் குளிக்க வைக்க சோப் உபயோகிப்பதற்குப் பதில், சோப்பைப் போலவே இருக்கும் ‘சிண்டெட் பார்’ [Syndet bar] உபயோகிக்கலாம். இது குழந்தையின் சருமத்தை சுத்தமாகவும் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். மேலும், குழந்தைகளுக்குத் தலைக்குக் குளிப்பாட்டுவதாக இருந்தால் அவர்களின் கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தாத, குழந்தைகளுக்கான பிரத்யேகமான, தரமான ஷாம்பூவை உபயோகிக்கலாம். மற்றபடி சோப்பு, அரப்புத்தூள், சீயக்காய்த்தூள் போன்றவற்றை எல்லாம் பயன்படுத்தக்கூடாது.

ஆனால், சில குழந்தைகளின் சருமம் வறட்சியுடன் காணப்படும். அதற்கு எண்ணெய் தடவும் பழக்கம் பலரிடம் உண்டு. அப்படி தடவும் எண்ணெய்க்கு பதில் ‘எமோலியன்ட் லோஷன் ‘ [Emollient Lotion] உபயோகிக்கலாம். மேலும், நம் குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் கண்களிலும் புருவங்களிலும் மை தீட்டக் கூடாது. பெரும்பான்மையான கண் மைகளில் காரீயம் கலந்திருக்கும்.

அதை உபயோகிப்பதால் குழந்தையின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தவிர, கண் மை உபயோகிப்பதால் குழந்தையின் கண்களில் எரிச்சல், சிவந்து போவது, கண்ணீர் வருவது, ஒவ்வாமை மற்றும் நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். எனவே, கண் மையைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது என குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்