- Advertisement -
உலகளவில் தற்போது உள்ள தொழில்நுட்ப துறையில் ஏற்படும் பொருளாதார மந்தநிலையால் பல நிறுவனங்கள் கடும் சிரம்மத்தை சந்தித்து வருகிறது.இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை குறைத்து வருகின்றன. அதில், அமேசான், ட்விட்டர், ஓலா, டான்ஸோ, கூகிள் போன்ற நிறுவனங்கள் உலகளவில் உள்ள அவரது நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர்.
அந்த வகையில், தற்போது தகவல் தொழிநுட்ப துறையில் பிரபல நிறுவனமாக இருக்கும் Cognizant நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. இதில் குறைந்தபட்சம் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக Cognizant நிறுவனம் அறிவித்துள்ளது. இது அங்கு பணிபுரியும் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -