Sunday, February 25, 2024 2:53 am

வெயிலில் குழந்தைகள் விளையாடும் போது சன் ஸ்கிரீன் அவசியமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நம் பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாதங்களில் இருந்தே சன் ஸ்கிரீன் உபயோகிக்கத் தொடங்கலாம். அதற்கு முன்புவரை வேண்டியதில்லை. அதிலிலும் 4-5 வயதுக்குப் பிறகுதான் பிள்ளைகள் வெளியே விளையாடுவதில் ஆர்வம் காட்டுவார்கள். அப்போது அவர்களை வெயிலில் விடாமல் தடுப்பதுதான் சவாலே. இதில் சன் ஸ்கிரீன் போட்டுவிட்டு குழந்தைகளை வெளியே வெயிலில் விளையாட விடுவது சரியா என்றால், அதைத் தவிர்ப்பதே சிறந்தது. குறிப்பாக வெயில் உச்சத்தில் இருக்கும்போது குழந்தைகளை வெளியே விட வேண்டாம்.

மேலும், இந்த சன் ஸ்கிரீன் போட்டுவிடுவதால் குழந்தைக்குப் பாதுகாப்பு என நினைப்பதைவிட, அந்த வெயிலைத் தவிர்க்கச் செய்வதே சிறந்தது. குழந்தைகளுக்கென பிரத்யேக சன் ஸ்கிரீன் எல்லாம் கிடையாது. குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு என எல்லோருக்கும் ஒன்றுதான். நல்ல சன் ஸ்கிரீன் என்றால் அதில் 30 முதல் 50 வரை எஸ்.பி.எஃப் (சன் புரொட்டெக்ஷன் ஃபேக்டர்) இருக்க வேண்டும். யுவிஏ மற்றும் யுவிபி கதிர்கள் தாக்காமல் பாதுகாக்கும்படியாக இருக்க வேண்டும்.

அதைபோல் நான்காமிடோஜெனிக் (Noncomedogenic) தன்மை கொண்டதா என பார்த்து வாங்க வேண்டும். அதாவது நம் சரும துவாரங்களை அடைக்காமல், பருக்களை ஏற்படுத்தாதபடி இருக்க வேண்டும். வியர்வை மற்றும் தண்ணீர் ரெசிஸ்டன்ட்டாக இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும் என சருமநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்