Friday, June 2, 2023 3:18 am

இந்திய மல்யுத்த சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலக மாட்டேன்: பாஜக எம்.பி. பிரிஜ்பூஷன் உறுதி..!

spot_img

தொடர்புடைய கதைகள்

ஜூன் 1 முதல் கோவாவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை படம் பிடிக்க AI கேமராக்கள் அறிமுகம் !

தலைநகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (AI)...

டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே அவசர சட்டம்: ஸ்டாலினை கெஜ்ரிவால் இன்று சந்திக்கிறார்

தேசிய தலைநகரில் நிர்வாக சேவைகள் மீதான கட்டுப்பாடு தொடர்பான மத்திய அரசின்...

10ம் வகுப்பு பாட புத்தகத்தில் அதிரடி மாற்றங்கள் வருகிறது

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் நடந்த கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பால், பள்ளி...

கர்நாடகாவில் கோர விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம்

கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படை சேர்ந்த பயிற்சி விமானம்...
- Advertisement -

இந்தியாவில் உள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை தருவதாக இந்திய மல்யுத்த தலைவர் பிரிஜ்பூஷன் பெயரில் கடந்த ஜனவரி மாதத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இதனை அறிந்த முன்னாள் மல்யுத்த வீரர்கள் பிரிஜ்பூஷன் மேல் நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரித்த போலீஸ் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த நிலையில் இப்போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால், தற்சமயம் வரை இந்திய மல்யுத்த தலைவர் பிரிஜ்பூஷன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து நீதிமன்றம் போலீஸுக்கு இந்த பிரிஜ்பூஷன் மீது வழக்கு போட நேற்று உத்தரவிட்டு இருந்தது. இதனால் போலீஸ் சார்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.

அதேசமயம், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து நான் விலகமாட்டேன் என பிரிஜ்பூஷன் சற்றுமுன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நிருபர்கள் கேட்ட போது, நான் பதவி விலகினால் என் மீதுள்ள குற்றம் ஏற்றுக்கொண்டுவிட்டதாக பொருள்படும் என கூறியுள்ளார். மேலும், அவர் டெல்லி காவல்துறையின் விசாரணைக்கு நான் தயார் என்றும் கூறினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்