Sunday, May 28, 2023 6:34 pm

குரூப் 1 முதல் நிலை தேர்வு ரிசல்டை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி..!

spot_img

தொடர்புடைய கதைகள்

மீனம்பாக்கம் மீண்டும் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியது

மிதமான தென்மேற்கு பகுதிகள் குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் நிலவுவதால், சனிக்கிழமையன்று 41.6...

புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை தேசிய ஒருமைப்பாட்டின் நிகழ்வாக ஆக்குங்கள் கமல் !

அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒரு நாள் காத்திருக்கலாம் என்று வலியுறுத்தி, நடிகரும்,...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் !

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் நடந்த ஐடி சோதனையின்...

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம் !

பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் ₹ 34.7...
- Advertisement -

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1 பதவியில் மொத்தம் 92 காலியிடங்கள் இருப்பதாக கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்திருந்தது. இதில் 18 துணை கலெக்டர்கள், 26 போலீஸ் டிஎஸ்பி, 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், 25 வணிகவரி உதவி ஆணையர்கள், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போன்ற பதவிக்கு பணியாளர்களை நிரப்புவதற்காக வேண்டியே இந்த அறிவிப்பு. இதற்காக மொத்தம் 1.91 லட்சம் பேர் இந்த குரூப் -1க்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டன .

இந்த குரூப்-1க்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதி நடந்தது. இந்த தேர்வு முடிவு கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகும் என முதலில் அறிவித்திருந்தனர். பின்னர் இந்த தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்துக்கு தள்ளி போகின. ஆனால், அப்பொழுதும் தேர்வு முடிவுக்கள் வெளிவராமல் தேர்வர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இந்நிலையில், இந்த ஏப்ரல் மாதத்தில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது என்றும், மெயின் தேர்வு ஆகஸ்ட் .10 ல் தொடங்கும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்