Thursday, April 25, 2024 2:23 pm

உடல் நல குறைவால் வனிதாவின் முன்னாள் கணவர் மரணம் !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இவரது சகோதரர் நடிகர் அருண் விஜய். ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக வனிதா விஜயகுமார் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இப்போது அவர் ஒரு ஷாப்பிங் ஸ்டோரையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் வனிதா விஜயகுமாரின் சொந்த வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்தது. வனிதா விஜயகுமாரின் முதல் இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடிந்ததால், டான்ஸ் மாஸ்டரான ராபர்ட் மாஸ்டருடன் டேட்டிங் செய்தார்.

ஆனால் அவர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்பட்டதால் இந்த உறவு பாதியிலேயே முடிந்தது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்டார்.அப்போது வனிதா விஜயகுமார் தனது யூடியூப் சேனலை ஆரம்பித்து கோவிட் காரணமாக வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநராக இருந்த பீட்டர் பால் வனிதாவுக்கு உதவி செய்தார். இந்த பழக்கத்தால் வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் இணையத்தில் வெடிக்க ஆரம்பித்த சில மாதங்களிலேயே பீட்டர் பாலுடன் வனிதா பிரிந்தார்.

அதாவது பீட்டர் பாலின் முதல் மனைவி வனிதாவுக்கு திருமணமான போதே பிரச்சனை. இதனால், வனிதா கோர்ட், வழக்கு என அலைந்தார். மேலும், தயாரிப்பாளர் ரவீந்தரும் வனிதாவுக்கு எதிராக யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். கடைசியில் பீட்டர் பால் யார் என்று அறிந்த வனிதாவே அவரைத் தூக்கி எறிந்தார். ஏனென்றால் அவர் அதிகமாக குடிப்பதாக வனிதா கூறினார். இந்நிலையில், சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பீட்டர் பால் உயிரிழந்தார். இதை அறிந்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்