Sunday, May 28, 2023 6:05 pm

”சினிமாவை விட்டு போக நினைத்தேன்” பிரபல இயக்குனர் சுதா கொங்கராவின் உருக்கமான பதிவு..!

spot_img

தொடர்புடைய கதைகள்

அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா ? லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவின் பரபரப்பான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான அட்லீ தற்போது ஷாருக்கானின்...

டிமான்டே காலனி 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

அருள்நிதியின் கிராமிய சமூக நாடகமான கழுவேதி மூர்க்கன் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது,...

பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய விஜய் ஆண்டனி!

நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியைக்...

ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கிறாரா ? லேட்டஸ்ட் அப்டேட்

கடந்த இரண்டு மாதங்களாக, ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு...
- Advertisement -

அண்மையில் சென்னையில் ஒரு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் அந்த விழாவில் கூறியது, ”என்னுடைய முதல் படமான துரோகி படத்தை எடுப்பதற்கு முன் இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி கொண்டியிருந்தேன் என்றும், இந்த துரோகி படத்தை எடுக்கும்போது மிகவும் டார்ச்சராக இருந்தது . அப்போது மணி சாருக்கு நான் இந்த சினிமாவை விட்டு போகிறேன் என ஒரு மெசேஜ் அனுப்பினேன்.

எப்போது எந் மெசேஜ் அனுப்பினாலும் தாமதமாக ரிப்ளை வரும். ஆனால், இதற்கு மட்டும் உடனடியாக 4 பக்கத்திற்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.அதில் அவர் என்னவானாலும் சரி இந்த துரோகி படத்தை முடித்துவிட்டு தான் வர வேண்டும் என கூறினார். அதனால் அப்படத்தை கஷ்டப்பட்டு எடுத்தும் அப்படம் மிக பெரிய தோல்வியை சந்தித்தது. இதுகுறித்து நான் மணிரத்தினம் சாரிடம் பேசும் போது, அவர் நீ 3 படம் எடுத்து அதில் தோல்வியை சந்தித்த இயக்குனரிடம் பேசி கொண்டிருக்கிறாய் என்பதை நினைவில்கொள் என்றார்.

பின்னர், நான் அடுத்த எடுத்த படம் தான் இறுதிச்சுற்று. இப்படத்தை எடுக்கும் போது எல்லாருமே இதை உன்னால் எடுக்கவே முடியாது என சொன்னார்கள். அப்போதும் நான் மணி சாரிடம் சென்ற போது, அவர் ‘நீ உன் வேலையில் மூலம் இப்படத்தை வெற்றிகரமாக எடுத்து காட்டு என இயக்குனர் சுதா கொங்கரா உருக்கமாக பேசினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்