பொதுவாக நாம் எதிர்கொள்ளும் பருவ காலம் என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் மக்கள் குளிர் காலத்தை தாங்கி கொள்ளும் வெயில் காலத்தை சந்திக்க சிரமப்படுகின்றனர். மேலும், இந்த கோடை காலத்தில் பல நோய்கள் நம்மை தாக்க வருகின்றன. இதற்கு முக்கிய காரணமே, நம் உடலில் வெயிலை தாங்கிக்கொள்ள சக்தி இல்லாததே காரணமாகும்.இதனால் மக்கள் இந்த கோடை காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுகிறார்கள்.
அப்படி சாப்பிடும் பழங்களில் கோடை வெயிலுக்கு ஏற்றது லிச்சி பழம் ஆகும். இந்த பழம் பிங்க் நிற முட்டை போல் இருக்கும். இதில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் இது கோடை வெயிலுக்கு ஏற்ற பழமாக கருதப்படுகிறது. இந்த லிச்சி பழத்தை நாம் தினசரி எடுத்துக்கொள்ளுவத்தின் மூலம், நம் உடலில் ஏற்படும் வெப்பம் காரணமாக வரும் வயிறு கோளாறு பிரச்சனை, அதிக உடல் எடையை குறைக்கிறது.
மேலும், இந்த லிச்சி பழத்தில் உள்ள ஆண்டி – ஆக்சிடென்டுகளால், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.