உலக நாடுகளில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்து பரவி வந்த நிலையில், தற்போது அதன் பரவல் குறைந்துள்ளது. ஆனால், முழுமையாக இந்த கொரோனாவை அழிக்க முடியவில்லை. இதன் காரணமாக, சில நாடுகளில் இன்னும் கொரோனா பரவல் இருந்து கொண்டே இருக்கிறது. இதில் இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2020ல் அதிகரித்த கொரோனா தற்போது படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால், இந்தியாவில் சில வாரமா கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
அதன்படி, இந்தியாவில் நேற்று மட்டும் 7,533பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைபோல், இன்றும் சுமார் 7,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும், இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,32,344லிருந்து 4,49,39,515ஆக அதிகரித்துள்ளது. அதைபோல் இன்று கொரோனாவால் 40 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.