Sunday, May 28, 2023 6:44 pm

தொடங்கியது கோடை காலம்..! உயர் நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!

spot_img

தொடர்புடைய கதைகள்

மீனம்பாக்கம் மீண்டும் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியது

மிதமான தென்மேற்கு பகுதிகள் குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் நிலவுவதால், சனிக்கிழமையன்று 41.6...

புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை தேசிய ஒருமைப்பாட்டின் நிகழ்வாக ஆக்குங்கள் கமல் !

அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒரு நாள் காத்திருக்கலாம் என்று வலியுறுத்தி, நடிகரும்,...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் !

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் நடந்த ஐடி சோதனையின்...

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம் !

பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் ₹ 34.7...
- Advertisement -

தமிழகத்தில் பொதுவாக கோடை காலம் ஆரம்பித்தால் போதும் மாணவர்களுக்கு விடுமுறை நீண்ட நாள் வழங்கப்படும். அதே வகையில், மே மாதம் தொங்கியது முதல் உயர் நீதிமன்றத்திற்கு சில ஆண்டுகளாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் அந்த கோடை காலங்களில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதால் அந்த வழக்குகள் அனைத்தும் விசாரிக்க சிறப்பு நீதிபதிகள் அமர்த்தப்படுவார்கள்.

ஆகவே, இந்த சிறப்பு நீதிபதி அமர்வு தான் இந்த கோடை காலங்களில் வரும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவர். இது தான் தற்போது உள்ள நடைமுறை. அதனால் சென்னை உயர்நீதிமன்றம் இதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வெயில் காலத்தில் விசாரிக்கும் சிறப்பு நீதிபதிகள் யாரென முழு லிஸ்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த லிஸ்டில் முதலாவதாக தலைமை நீதிபதி ராஜா உட்பட 29 நீதிபதிகள் இந்த கோடை காலத்தில் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிப்பார்கள். மேலும், மே மாதம் முதல் வாரத்தில் மட்டும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மனுதாக்கல் மட்டும் பெறப்படும். பின்னர் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் அந்த மனுக்களின் விசாரணை நடைபெறும் என கூறியுள்ளனர்.

அதைபோல், மற்ற வாரங்களில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மனுதாக்கல் பெறப்பட்டு, புதன் வியாழன் உள்ளிட்ட கிழமைகளில் அந்த மனுக்களின் விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்