Wednesday, April 17, 2024 12:09 pm

ஓபிஎஸ் வேட்பாளர் குமார் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தது கர்நாடக அரசு..!

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கர்நாடகாவில் தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளன. இதில் விண்ணப்பிக்க அம்மாநிலத்தில் உள்ள காட்சிகளின் வேட்பாளர்கள் போட்டிபோட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ் அணி சார்பில் காந்தி நகர் தொகுதியில் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த குமார் (52) என்பவர் கடந்த 20ஆம் தேதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். அதில் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு சொந்தமானது என்றும், அதை ஒபிஎஸ் அணிகளுக்கு அந்த சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். அதை வேளையில் குமார் அவர்கள் ஒபிஎஸிடம் பி பார்ம் பெற்று அதை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார்.

ஆனால் , இதை எதிர்த்த அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் அவர்கள் வேட்பாளர் குமார் போலியான ஆவணங்கள் மூலம் தான் இரட்டை இலை கோரியதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளார். இதனால் நீதிமன்றம் குமார் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளது. அதன் காரணமாக, போலீஸ் 171 ஜீ – பிரிவின் கீழ் வ‌ழக்குப் பதிவு செய்தது.

அதைபோல், கடந்த 24ஆம் தேதியில் குமார் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

சமீபத்திய கதைகள்