தமிழகத்தில் பொதுவாக டாஸ்மாக் கடைகளை திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, குடியரசு தினம், வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினம் போன்ற நாட்களில் மூடப்படுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், தற்போது வரும் மே தினத்தை (May 1) முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இதற்காக அந்தந்த மாவட்டங்களில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வெளியிடுவார்கள். அதுமிட்டுமில்லாமல் தமிழக அரசு சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்படும் என்கின்றனர். அதைபோல், சென்னையிலும் வரும் மே 1ல் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்களும் மூட வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். அதைபோல் திருவண்ணாமலையிலும் அனைத்து டாஸ்மாக் பார்கள் மூட வேண்டும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருக்கிறார்.