இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்: பாகம் 2 பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது . ஒரு பிரிவினர் பொன்னியின் செல்வனை, பிரபாஸ் மற்றும் ராணா டக்குபதி நடித்த எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலியுடன் ஒப்பிட்டனர். இது நிறைய தமிழர்களை கோபப்படுத்தியது, அவர்கள் ட்விட்டரில் பிஎஸ் 1 ஐ பாகுபலியுடன் ஒப்பிடுபவர்களுக்கு எதிராக போர் தொடுத்தனர். பாகுபலி ஒரு கற்பனைப் படம் என்றும், பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புனைவு என்றும் பலர் அதை நியாயப்படுத்த முயன்றனர்.
‘பொன்னியின் செல்வன் 2’ படத்தை ‘பாகுபலி 2’ படத்துடன் ஒப்பிட்டு தெலுங்கு ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சித்து வரும் நிலையில், அதற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பதில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் படமாக்கப்பட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தேர்ந்த நடிகர்களின் நடிப்பின் மூலம் படம் கவனம் பெற்றுள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் படத்தை தெலுங்கு சினிமா ரசிகர்களின் ஒருபகுதியினர் பாகுபலியுடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். பாகுபலி அளவிற்கு விஎஃப்எக்ஸ், பிரம்மாண்டம் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இல்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள், ‘பாகுபலி2’ ஒரு கற்பனைக் கதை என்றும், ’பொன்னியின் செல்வன்2’ வரலாற்றுப் புதினம் என்றும், ‘பாகுபலி’ படத்தின் பல காட்சிகள் ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் தாக்கத்தில் உருவானவை என்றும் சுட்டிக்காட்டினர். ‘பொன்னியின் செல்வன்2’ படத்தை ஒப்பிட ‘பாகுபலி2’ சிறந்த படம் அல்ல என்று தமிழ் சினிமா ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால் இரு தரப்பும் கருத்து மோதலில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் ‘பாகுபலி’ எந்தப் பாகுபாடும் இல்லாமல் ரசிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கும் சில பதிவர்கள், அதையெல்லாம் மறந்துவிட்டு ஏன் தெலுங்கு ரசிகர்கள் இப்படி எதிர்மறையான கருத்துகளைப் பரப்ப வேண்டும் எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
Again Proved 🤝#rajamouli >>> #ManiRatnam pic.twitter.com/TLWP41ebjm
— ⚡𝘽 𝙃 𝘼 𝙍 𝘼 𝙉 𝙄 ✨💜𓃵ᵀᴴᴬᴸᴬ (@Bharani_Tweets_) April 28, 2023
Common Knowledge 🤷#Bahubali2 >>> #PonniyinSelvan2 pic.twitter.com/Ns8tW5j9aV
— ⚡𝘽 𝙃 𝘼 𝙍 𝘼 𝙉 𝙄 ✨💜𓃵ᵀᴴᴬᴸᴬ (@Bharani_Tweets_) April 28, 2023
#PonniyinSelvan2 >>>>> This Sh*t Bahubali 2 🤫🔥 pic.twitter.com/lmzOHlkShs
— ⱽʲ VIPER ♠️ (@VJViper_jd7) April 28, 2023
எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி தொடர் மாஹிஷ்மஸ்தியின் கற்பனை உலகில் அதிகாரப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு காலகட்ட நாடகமாகும். இப்படத்தில் பிரபாஸ், ராணா டக்குபதி, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய தமிழ் இலக்கிய நாவலை அடிப்படையாகக் கொண்டது. கி.பி 900 முதல் 950 வரை சோழ சாம்ராஜ்யத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.