Tuesday, April 16, 2024 10:32 pm

பெண்களுக்கு இனி வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் வேலை சலுகை..! அரசு அதிரடி அறிவிப்பு..!

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டுகளாக வெறிநாய் மக்களை கடிப்பதால் ஏற்படும் ரேபிஸ் நோயை முடிவுக்கு கொண்டுவர வேண்டி புதுவை அரசு சுகாதாரத்துறை சார்பில் மாநில செயல் திட்டத்தை செயல்படுத்த கூடினர். இதில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அமைச்சர் தேனீ ஜெயக்குமார், சுகாதாரத்துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி அவர்கள், இனி அரசு வேலைகளில் பணிபுரியும் பெண்களின் நலனுக்காக,வெள்ளிக்கிழமைப் பூஜைகள் மேற்கொள்வதற்கு ஒரு மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகள் மட்டும் காலை 8. 45 முதல் காலை 10. 45 வரை 2 மணி நேரம் சிறப்பு விடுமுறை வழங்கப்படும் என்றும், இதற்காக அரசு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், இந்த விடுமுறை மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற நேரடி மக்கள் சேவைகள் பணிபுரிபவர்களுக்கு இந்த சிறப்பு அனுமதி பொருந்தாது என விளக்கமளித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்