பொதுவாக உலகம் முழுவதும் படம் பார்ப்பதென்றால் தியேட்டரில் தான் மக்களின் முதல் விருப்பமாக இருக்கும். ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டில் வந்த கொரோனாவிற்கு பிறகு தியேட்டரில் பார்க்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அப்போது வந்தது தான் இந்த OTT தளங்கள். இந்த ஓடிடி வந்த பிறகு மக்கள் பெரும்பாலும் தியேட்டரில் பார்ப்பதை விட இந்த OTT தளங்களையே பெரிதும் விரும்புகின்றனர்.
இதன் காரணமாக, பல்வேறு சர்வதேச ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்கள் பல கோடி செலவுசெய்து திரைப்படத்தை வாங்குகின்றன. அதைபோல், தொலைக்காட்சிகளில் தொடர்களை பார்ப்பது போல் இந்த OTT தளங்களில் மக்கள் தொடர்கள் பார்க்கின்றன. அப்படிப்பட்ட OTT தாளத்தில் பல்வேறு தொழில்போட்டி காரணமாக படங்கள் வாங்க காசை இறைக்கின்றன . கடைசியில் அது சந்தாதாரர்களான நமக்கு தான் சிரமம் வருகிறது.
அந்த வகையில், சர்வதேச OTT தளமான அமேசான் பிரைம் நிறுவனம் முதலில் ரூ.999க்கு ஆண்டு சந்தாவை அறிமுகப்படுத்தி பின்னர் 2021ல் அது ரூ .1,499ஆக உயர்ந்தது. இந்நிலையில், அமேசான் பிரைம் நிறுவனம் தனது ஆண்டு சந்தாவை எந்த மாற்றமும் செய்யாமல், மாத சந்தாவான ரூ.179-லிருந்து ரூ.299 ஆகவும், 3 மாத சந்தாவான ரூ.459-லிருந்து ரூ.599 ஆகவும் உயர்த்தி தற்போது உடனடியாக அமல்படுத்தியுள்ளது.