பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சுமார் 553 கிமீ தொலைவில் இந்தியா – பாகிஸ்தானின் எல்லை பகுதியான அமிர்தசரஸ் அருகே இந்திய ராணுவம் எல்லை பாதுகாப்பு படையினரால் அப்பகுதியை பாதுகாத்து வருகின்றனர்.ஏனென்றால், இப்பகுதியில் ட்ரோன் மூலம் ஆயுதம், வெடிபொருள், போதைப்பொருள் கடத்தல் ஆகியவை ஊடுறும் என அச்சுறுத்தல் உள்ளதாக பாதகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இங்கு சில வருடங்களாக ட்ரோன் மூலம் வரும் அச்சுறுத்தலால் அங்கு பல சவால்களை இந்திய ராணுவம் அப்பகுதியில் சந்தித்து வருகிறது. மேலும், அப்படி வரும் ட்ரோன்கள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இன்று இந்த அமிர்தசரஸ் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்த போது, அங்குள்ள தனோவா கலன் கிராமத்தில் பாகிஸ்தானின் ட்ரோன் பறந்து வந்ததை கண்டு இந்திய ராணுவம் அதை தூப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியது. பின்னர் அதில் 2 கிலோ ஹெராயின் இருந்ததை கண்டுபிடித்து, அதுகுறித்து விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.