Friday, April 26, 2024 1:58 am

ஏடிஎம் உடைத்து ரூ. 39 லட்சம் வரை இளைஞர்கள் நூதன திருட்டு..!

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள லக்னோவில் இருக்கும் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து சுமார் ரூ.39 லட்சம் பணத்தை இளைஞர் கும்பல் கொள்ளையடித்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அந்த கும்பலை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கும்பல் லக்னோவில் உள்ள சுல்தான் பூர் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து போலீஸ் அவர்களை மடக்கிப்பிடித்து ரூ.9 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த 4 பேர் கொண்ட இளைஞர் கும்பலில் நீரஜ் என்பவர் தான் முக்கிய குற்றவாளி என்பதை விசாரணையின் போது அறிந்து கொண்டனர். ஆகவே அந்த நீரஜை போலீஸ் கடுமையாக விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் பீகாரை சேர்ந்த சுதிர் மிஸ்ரா என்பவர் நாடு முழுவதும் உள்ள வேலை இல்லாத இளைஞர்களுக்கு 15 நிமிடங்களில் ஏடிஎம்-ல் திருடுவது எப்படி என்ற கோச்சிங் கிளாஸ் எடுத்து வருவதாகவும், அதற்கு 30 நாட்கள் பயிற்று கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். பின்னர் இந்த கும்பலை ஏடிஎம்-ல் திருட அனுப்பி உள்ளதாக விசாரணை முடிவில் போலீஸ் கூறியுள்ளனர்.

மேலும், இந்த கும்பலை பீகார் அழைத்து சென்று அந்த சுதிர் மிஸ்ரா நபரை பிடிக்க போலீஸார் தற்போது விசாரித்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்