Sunday, May 28, 2023 7:29 pm

96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இனி 200 நாடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

கேரளா ஸ்டோரி பற்றி மனம் திறந்து பேசிய கமல்

இந்தியா முழுவதும் அறியப்பட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன்....

அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா ? லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவின் பரபரப்பான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான அட்லீ தற்போது ஷாருக்கானின்...

டிமான்டே காலனி 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

அருள்நிதியின் கிராமிய சமூக நாடகமான கழுவேதி மூர்க்கன் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது,...

பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய விஜய் ஆண்டனி!

நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியைக்...
- Advertisement -

சினிமாவின் எந்தொரு கலைஞனும் எந்த மொழியில் நடித்தாலும் அவர்களது வாழ்நாள் லட்சியமே ஒரு தடவையாவது உயரிய விருதான ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்பதே கனவாகும். அப்படிப்பட்ட ஆஸ்கார் விருது ஆரம்பத்தில் ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. பின்னர் அனைத்து மொழி படங்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. அதன்படி மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘காந்தி’ என்ற படம் ஆஸ்கர் விருதுகளை அள்ளியது நாம் அறிந்ததே.

பின்னர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு கடந்த 2008ஆம் ஆண்டில் ஸ்லம்டாக் மில்லினர் என்ற ஹாலிவுட் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளும், ரசூல் பூக்குட்டிக்கு ஒரு விருதும் கிடைத்தது. பின்னர் சில ஆவணப்படங்கள் விருதுகளை பெற்று தந்தது. தற்சமயம், தென்னிந்திய படமான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைத்த கீராவணிக்கு ஆஸ்கார் விருது பெற்று தந்துள்ளது.

இந்நிலையில் வரும் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த 2024ல் மார்ச் 10ம் தேதி நடத்தப்படுவதாகவும், அந்த நிகழ்ச்சி டால்பி தியேட்டரில் நடத்தப்படும் என்று ஆஸ்கார் அகாடமி அறிவித்துள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியை ஏபிசியின் மூலம் 200 நாடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று சினிமா ரசிகர்களுக்கு இன்பச்செய்தி கொடுத்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்