தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று (26-04-2023) மாற்று நாளை (27-04-2023) ஆகிய 2 நாட்களுக்கு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய சாலை வழியாக விழுப்புரம் செல்கிறார் . பின்னர் இந்த களவு பணிகள் முடிந்ததும் நாளை மாலை சென்னை திரும்பி டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஏனென்றால், தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எதிரொலியாக இந்த பயணம் என்கிறார்கள்.
மேலும், இந்த பயணத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாளை மறுநாள் (28 ஆம் தேதி) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க போவதாகவும், அப்போது தமிழக ஆளுநர் குறித்து கருத்துக்கள், சர்ச்சைகள் போன்றவற்றை பற்றி பேச முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதக்களுக்கு ஆளுநர்கள் முடிவெடுக்க குறிப்பிட்ட கால நிர்ணயம் வேண்டும் என்பதை கூறி குடியரசு தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றனர்.