சென்னை குணசேகர் இயக்கத்தில் முன்னணி நடிகையான சமந்தா அவர்களின் நடிப்பில் வந்த ‘சாகுந்தலம்’ படம் திரைக்கு வந்து பல கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இப்படத்தின் பட்ஜெட் மொத்தம் ரூ.60 கோடி ஆகும். ஆனால் திரைக்கு வந்த பிறகு ரூ .10 கோடி வரை மட்டுமே வஸோலித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து இப்படத்தின் தெலுங்கு சினிமா பட தயாரிப்பாளர் சிட்டிபாபு அவர்கள் கூறியது, சாகுந்தலம் படத்தோடு சமந்தாவின் மார்க்கெட் சரிந்தது என்றும், இவருக்கு எந்த விதமான நோயும் இல்லை இவர் கூறியது அனைத்தும் நாடகம் என்றார்.
மேலும், இவர் மக்களின் அனுதாபத்தை பெறவே இப்படி கூறி வருகிறார். நடிகை சமந்தா கதாநாயகியின் அந்தஸ்தை இழந்துவிட்டதாக கூறினார். இதற்கு பதிலடியாக சிட்டிபாபுக்கு காது மடல்களில் இருக்கும் முடியை கிண்டலடிக்கும் விதமாக காதில் ஒருவருக்கு முடி வளருவது அதிகமான ஹார்மோன் சுரப்பதே காரணமாம் இது யார் என்பது உங்களுக்கு தெரியும் என்றார். இதற்கு பதில் அளித்த தயாரிப்பாளர் என் காதில் உள்ள முடியைப் பற்றி பேசாமல், என் வார்த்தைகளில் உள்ள நேர்மையைப் பற்றி பேசினால் நன்றாக இருந்திருக்கும் என்றும், மேலும் அவர் நான் பேசினால் நடிகை சமந்தா மானம் போய் விடும் என கூறியுள்ளார்.